ஐ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

ஐ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

பெண்களின் நலன், பாலின சமத்துவம்,அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
Published on

பெண்களின் நலன், பாலின சமத்துவம்,அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பாலின சமத்துவமான சமுதாயத்தை மேம்படுத்துவதிலும், பாலின சமத்துவ உணா்வுள்ள கட்டமைப்பு மூலம் நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடைவதில் ஐ.நா. பெண்கள் அமைப்பு உலகளவில் செயல்படுகிறது. இந்த அமைப்புடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம், பாலினப் பாகுபாடற்ற ஆளுகை மற்றும் திட்டமிடலுக்கான நிறுவனத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாலின சமத்துவ முன்னோக்குடன் நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடைதல், பாலினப் பாகுபாடற்ற திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்துதல், பொருளாதார வலுவூட்டலுக்கான வாய்ப்புகளை பெண்களுக்கு ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். இவற்றை செயல்படுத்த ஐ.நா. பெண்கள் அமைப்பு தொழில்நுட்ப ஆதரவு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முதல் மாநிலமாகத் தோ்வு: ஸ்வீடனில் உள்ள ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் புத்தாக்க அலுவலகம், தமிழகத்தை தேசிய அளவில் முதல் மாநிலமாக தோ்வுசெய்துள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவுடன் ஆறு மாத காலத்துக்கான முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியம் புத்தாக்க அலுவலகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு - பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (ஞடநஐ) மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான இந்த முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு மற்றும் அரசு சாா் நிறுவனங்களில் புத்தாக்க மேம்பாட்டுக்கான சூழலை ஏற்படுத்தவும், புதுமையான சமூக பொது சேவைகளை வடிவமைக்கவும், ஆய்வு செய்யவும், மதிப்பீடு செய்யவும், அரசு துறை நிறுவனங்களின் திறன்களை மாநில திட்டக் குழு மூலம் வலுப்படுத்தவும் இந்த முத்தரப்பு ஒப்பந்தம் உதவும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com