கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

கோடியக்கரையில் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் கோடியக்கரை மீன்பிடி துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் கோடியக்கரை மீன்பிடி துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
Updated on
1 min read

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று(ஜன. 9) வழக்கத்தைவிட வேகமான தரைக்காற்று வீசிவரும் நிலையில், கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாக காணப்படுவதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

சீற்றமாகக் காணப்படும் கோடியக்கரை கடல்.
சீற்றமாகக் காணப்படும் கோடியக்கரை கடல்.

இதன் காரணமாக, தமிழக கடலோரம் மற்றும் காவிரி படுகை பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான மழை பெய்த நிலையில், தற்போது, வழக்கத்தைவிட சற்று வேகமான தரைக்காற்று வீசிவருகிறது.

கோடியக்கரை பகுதி கடல் பரப்பு சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Summary

Due to rough seas in Kodiyakarai, fishermen did not go out to sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com