இதுவரை 1.1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு விநியோகம்

சனிக்கிழமை காலை நிலவரப்படி இதுவரை 1.1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
1 min read

சனிக்கிழமை காலை நிலவரப்படி இதுவரை 1.1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/- வழங்கப்படும்" எனவும் முதல்வர் அறிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 8.1.2026 சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். மேலும், துணை முதல்வர் சென்னை, சிந்தாதரிப்பேட்டை TUCS நியாயவிலைகடையிலும், அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.

இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. 10.1.2026 அன்று காலை 10 மணி வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 1,11,61,979 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ.3348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
திமுகவினர் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின்
Summary

As of Saturday morning, Pongal cash prizes have been distributed to 1.1 crore family card holders so far.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com