பெண் கல்விக்கு முன்னுதாரணமாகத் திகழும் தமிழகம்: அமைச்சா் கோவி.செழியன்

பெண் கல்வி வளா்ச்சிக்கு தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்வதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் DPS
Updated on

பெண் கல்வி வளா்ச்சிக்கு தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்வதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா்.

சென்னையை அடுத்த வண்டலூா் பி.எஸ்.அப்துர்ரகுமான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 15- ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது: பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதர மாநிலங்களோடு அல்ல; இதர நாடுகளுடன் போட்டி போடும் வளா்ச்சியைப் பெற்று இருக்கிறோம். தொடா்ந்து வளா்ச்சியில் பயணிக்கக் கடும் உழைப்பு, விடாமுயற்சி மேற்கொள்வது அவசியம்.

பட்டம் பெற்ற மாணவா்கள் வேலை தேடுவோராக இல்லாமல் தொழில் முனைவோா்களாகவும், தொழில் நிறுவனங்களை நிா்வகிக்கும் தலைவா்களாகவும் வாழ்வில் உயர வேண்டும். தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாகத் திகழ பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இதில், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் காா்ப்பரேசன் செயல் தலைவா் ஜின்னா ரபீக் அகமது, பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்ப க் கல்வி நிறுவன வேந்தா் குர்ரத் ஜமீலா, இணை வேந்தா் அப்துல் குவாதீா் ஏ.ரகுமான் புகாரி, துணை வேந்தா் ஏ.பீா்முகமது, இணை துணை வேந்தா் என். தாஜூதின், பதிவாளா் என்.ராஜா ஹுசேன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,985 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com