

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தில்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்புகோரி தவெக மனு அளித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்துவதற்காக, தில்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்துக்கு வருமாறு விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை விடுத்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை (ஜன. 12) விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், தில்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தில்லி காவல்துறையிடம் தவெக மனு அளித்துள்ளது. விஜய் தங்குமிடத்தில் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, கட்சி இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மனு அளித்துள்ளார்.
கரூரில் கடந்த செப். 27 ஆம் தேதியில் விஜய் தலைமையிலான தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தோர், தவெக நிர்வாகிகள், கரூர் ஆட்சியர், கரூர் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், கட்சித் தலைவர் விஜய்யிடமும் விசாரணை நடத்த சிபிஐ அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.