

காங்கிரஸ் விமர்சனம்: மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
தில்லியில் உள்ள அரசு இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இன்று பொங்கல் விழா கொண்டாடினார். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களுடன் நடிகர்கள் ரவி மோகன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.
ஹிந்தி திணிப்புக்கு எதிரான படத்தை எடுத்துவிட்டு, ஹிந்தியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி குழுவினர் கலந்துகொண்டதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில், “சங்கிக் குழு பொங்கலில் பராசக்தி குழு. ஆனால் ஜன நாயகனை தடை செய்துள்ளார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்துவதற்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலரும் பதிவிட்டிருந்தனர்.
விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்த மறுநாளே மோடி பங்கேற்ற விழாவில் பராசக்தி குழுவினர் கலந்துகொண்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.