எல். முருகன் வீட்டில் பொங்கல் விழா! மோடியுடன் ரவி மோகன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு!
பொங்கல் விழா: தில்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
மேலும், பாஜக தலைவர்களுடன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா நாளை (ஜன. 15) கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள அரசு இல்லத்தில் மத்திய இணையமைச்சரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான எல். முருகன் இன்று பொங்கல் விழா கொண்டாடினார்.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பொங்கல் வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக வெளியாகியுள்ள பராசக்தி படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகனுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று குரல்கொடுத்த நிலையில், மறுநாளே மோடியின் நிகழ்ச்சியில் பராசக்தி படத்தின் குழு பங்கேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pongal celebration at L. Murugan's house! Ravi Mohan and Sivakarthikeyan participated with Modi!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

