பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி.
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்துப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், “எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது.

குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம். தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி.
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக் கூட்டம்!
Summary

Prime Minister Narendra Modi writes a letter to the people of Tamil Nadu, extending Pongal greetings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com