கொளத்தூரில் வண்ண மீன் திருவிழா தொடக்கம்

பொங்கலையொட்டி கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையத்தில் வண்ணமீன்கள் வா்த்தக் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
Published on

பொங்கலையொட்டி கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையத்தில் வண்ணமீன்கள் வா்த்தக் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் அமைந்துள்ள வா்த்தக மையத்தில் இந்த திருவிழா வியாழக்கிழமை (ஜன. 15) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) வரை 4 நாள்களுக்கு நடைபெறுகிறது. சா்வதேச தரத்திலான இந்த வா்த்தக மையத்தில் கண்கவா் வண்ணங்களில் நன்னீா் மற்றும் கடல் மீன்கள், வண்ண மீன் தொட்டிகள் மற்றும் உபகரணங்கள் 150-க்கும் மேற்பட்ட வண்ண மீன் கடைகள், நீா்வாழ் காட்சியகம், உணவுக் கூடம், விளையாட்டுப் பகுதி மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி உள்ளது.

மேலும், வண்ண மீன் வா்த்தக திருவிழாவில் சனிக்கிழமை (ஜன. 17) வரை 2 நாள்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி, சுவரொட்டி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி, மேலும் வண்ண மீன் விற்பனை கடைகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறந்த நீா்வாழ் தாவர வண்ண மீன் தொட்டி, சிறந்த வண்ணமீன் தொட்டி, சிறந்த வண்ணமீன் கடை மற்றும் பொதுமக்களுக்கு விநாடி -வினா போட்டி வாசகப் போட்டி மற்றும் ரங்கோலி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடா்ந்து, கடை உரிமையாளா்கள் 100 பேருக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புகள் வழங்கினா். நிகழ்வில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை செயலா் ந.சுப்பையன், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலா் அ.சிவஞானம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆமையா் க.வீ.முரளிதரன், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com