மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பது மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு: அண்ணாமலை

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பது மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ! அண்ணாமலை
முதல்வர் ஸ்டாலின் ! அண்ணாமலை கோப்புப் படம்
Updated on
1 min read

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பது மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம்.

ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ரூ.60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிடித்த "பேரு பெத்த பேரு, தாக நீலு லேது" என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

image-fallback
சிறந்த ஜல்லிக்கட்டு வீரருக்கு அரசு வேலை! அலங்காநல்லூரில் முதல்வர் அறிவிப்பு!
Summary

BJP's K Annamalai criticised Tamil Nadu Chief Minister MK Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com