

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் தமிழகம் திணறுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பத்தில் போதையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை இயக்கியோரைத் தட்டிக் கேட்ட அப்பாவி இளைஞர்கள் இருவரை, போதைக் கும்பல் சரமாரியாகக் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த மாதம் போதையில் ரீல்ஸ் எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்த வடமாநில இளைஞர் மீது போதைக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது, பின் சேலை வியாபாரி ஒருவரை மற்றொரு போதைக் கும்பல் இழுத்துச் சென்று தாக்கி முகத்தில் குத்தியது எனத் தொடர்ந்து திருவள்ளூரில் நடக்கும் கொடூரச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதை பேயையும், அதில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களையும் தெளிவாகக் காட்டுகிறது.
போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால், மக்கள் நடமாடவே பயப்படும் வேளையில், "வெல்வோம் ஒன்றாக" என்பதற்கு பதிலாக, "போதைப் புழக்கத்தால் கொல்வோம் மொத்தமாக" என்று தான் திமுக கூற வேண்டும்! போதைப் பொருட்கள் மயமான முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை ஒழித்துத் தமிழகம் தனது சுயத்தை விரைவில் மீட்டெடுக்கும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.