சென்னைக்குத் திரும்பும் மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னைக்குத் திரும்பும் மக்கள் - முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல்!
போக்குவரத்து நெரிசல்.
போக்குவரத்து நெரிசல்.கோப்பிலிருந்து படம்
Updated on
1 min read

பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்புவதால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மக்கள் அதிகம் திரும்புவதால் சென்னை செல்லும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் - சென்னை ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில், மதுராந்தகம், பெரம்பலூர் மாவட்டம் இரூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இது தவிர, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சில இடங்களில் சாலை பணிகள் இன்னும் நிறைவடையாததால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உள்பட வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும் முக்கிய சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடிகளில் சென்னை மார்க்கத்தில் கூடுதலாக கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

Summary

People returning to Chennai - severe traffic congestion on the roads

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com