ஜன. 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

தவெகவின் தேர்தல் அறிக்கை குழு ஜன. 20 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை
கோப்புப்படம்.
Updated on
1 min read

தவெகவின் தேர்தல் அறிக்கை குழு ஜன. 20 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை நம் வெற்றித் தலைவர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.

இந்தக் குழு, வருகின்ற 20ஆம் தேதி (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சித் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கட்சித் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

It has been announced that TVK’s election manifesto committee will hold consultations on January 20.

ஜன. 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை
சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com