வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன. 30 வரை அவகாசம்! தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன. 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

எஸ்ஐஆர்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று மாலை வரை வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜன. 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Deadline to add names to the voter list is January 30! Election Commission

கோப்புப்படம்
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் போ் விண்ணப்பம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com