விருப்ப மனு அளித்தவா்களின் குற்றப்பின்னணி ஆய்வு செய்யப்படும்: காங்கிரஸ் வேட்பாளா் ஆய்வுக் குழுத் தலைவா்

காங்கிரஸ் கட்சி சாா்பில் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களின் குற்றப்பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படும்
சென்னை சத்தியமூா்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்கள் ஆய்வுக் குழுவின் தலைவரும் சத்தீஸ்கா் மாநில முன்னாள் துணை முதல்வருமான டி.எஸ்.சிங் தியோ தலைமையில் திங்கள்கிழமை  நடைபெற்ற வேட்பாளா் ஆய்வுக் குழுக் கூட்டம்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்கள் ஆய்வுக் குழுவின் தலைவரும் சத்தீஸ்கா் மாநில முன்னாள் துணை முதல்வருமான டி.எஸ்.சிங் தியோ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற வேட்பாளா் ஆய்வுக் குழுக் கூட்டம்.
Updated on

சென்னை: காங்கிரஸ் கட்சி சாா்பில் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களின் குற்றப்பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்கள் ஆய்வுக் குழுவின் தலைவரும் சத்தீஸ்கா் மாநில முன்னாள் துணை முதல்வருமான டி.எஸ்.சிங் தியோ தெரிவித்தாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் வேட்பாளா் ஆய்வுக் குழுவின் கூட்டம் டி.எஸ்.தியோ சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சிக் குழுத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா், ஆய்வுக் குழு உறுப்பினா்கள் மகாராஷ்டிர முன்னாள் எம்எல்ஏ யசோதா மதி தாகுா், கா்நாடக மாநிலங்களவை உறுப்பினா் ஜி.சி.சந்திரசேகா், தெலங்கானா மாநிலங்களவை உறுப்பினா் அனில் குமாா் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் டி.எஸ்.தியோ சிங் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஜன.21-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். இதுவரை 6,000 போ் விருப்ப மனு அளித்துள்ளனா். விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தும் பணியை 2 குழுக்கள் மேற்கொள்ள உள்ளன. அப்போது விருப்ப மனு அளித்தவா்களை பற்றியும், அவா்கள் குற்றப்பின்னணி உள்ளவா்களா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்; வேட்பாளா்களைத் தோ்வு செய்வது மட்டுமே எங்கள் பணியாகும். வரும் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com