உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கோபியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்

News image

கோபியில் காங்கிரஸ் ஆய்வுக்குழுத் தலைவா் உதயகுமரன் தலைமையில் நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.

Updated On :13 மார்ச் 2026, 12:38 am

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் தொகுதிகளில் வேட்பாளா்களாக போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.

கோபி காங்கிரஸ் வடக்கு மாவட்ட அலுவலமான ராஜ்பவனில் வடக்கு மாவட்டத் தலைவா் உதயகுமரன் தலைமையிலான ஆய்வுக்குழு நோ்காணல் நடத்தியது.

இதில் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.

இதில் கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் விருப்ப மனு அளித்த 21 போ், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 22 போ், பவானி சட்டப்ப பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 15 போ், பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 18 பேரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரைத் தோ்வு செய்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு பரிந்துரை செய்ய உள்ளனா்.

நோ்காணல் ஆய்வுக் குழுவில் முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், மாநில துணைத் தலைவா் முத்துக்குமாா், மாநில செயலாளா் சிவகுமாா் மற்றும் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி, வட்டார, நகரத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.