பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றது என்ன?

பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றது என்ன என்பது குறித்து...
பேரவைத் தலைவர் அப்பாவு.
பேரவைத் தலைவர் அப்பாவு.
Updated on
2 min read

ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கயிருந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கவில்லை என்று தெரிவித்து, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து, ஆளுநர் உரையை அவர் படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் தெரிவித்திருப்பதாவது:

* முதலமைச்சரின் அயராத உழைப்பினால், கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதம் என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எய்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இத்தகைய உயர் வளர்ச்சியை நமது மாநிலம் அடைவது இதுவே முதன்முறை. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

* சமுதாயத்தில் பெண்களின் உயர்த்திடவும் அவர்களின் உரிமையை நிலைநாட்டும் உயரிய நோக்கத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' மூலம் ஒரு கோடியே முப்பது இலட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 உரிமைத் தொகையாகப் பெறுகின்றனர். மகளிரின் சமூகப் பங்களிப்பினை அங்கீகரித்து அவர்களின் அவசியத் தேவைகளை நிறைவு செய்திட உதவும் இத்திட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்காக, இதுவரை ரூ. 33,464 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் தீர்த்து வைப்பதை இந்த அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. முதல்வரின் முகவரி எனும் துறை இணையதளம், கைப்பேசிச் செயலி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெறப்படும் மனுக்களுக்குத் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு, மனுதாரர்களுக்கு அவர்கள் மனுவின் நிலையினைத் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர்களின் நலன் காப்பதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசானது, அவர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அவர்களின் கடைசி மாத ஊதியத்தில் சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவும், தகுதிவாய்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியதாரர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாகவும், ஆண்டுதோறும் பணியிலுள்ள அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு மற்றும் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்குதல் உள்பட பல்வேறு அம்சங்களுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை' (TAPS) அரசு செயல்படுத்தியுள்ளது.

மேற்கூறிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு முதற்கட்டமாக ஒருமுறை பங்களிப்பாக ரூ. 13,000 கோடியும், மேலும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ. 11,000 கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு வழங்கும். தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும், அரசுப் பணியாளர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

அதேபோன்று சிறப்புக் காலமுறை ஊதிய முறையில் பணியாற்றி வரும் பணியாளர்களின் சிறப்பு ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மத்திய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகி வருவதால், மாநில அரசிற்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது. தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை மத்திய அரசு விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெருந்தடைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது.

இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து இம்மாமன்றம் பல்வேறு காலங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்றதற்குப் பின்னர், 2022 ஆம் ஆண்டு, 'மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி இப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கையை மறைமுக இந்தி மொழித் திணிப்பாக மட்டுமே இவ்வரசு கருதுவதோடு, இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை இவ்வரசு வலியுறுத்துகிறது.

இவ்வகையில் உயர்தனிச் செம்மொழியின் பெருமையினை உலகறியச் செய்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் போராடிப் பாதுகாத்திடவும், தமிழ்மக்களின் பெருங்கனவை நிறைவேற்றிடவும் எந்நாளும் ஓயாது உழைத்திட முதலமைச்சரின் தலைமையிலான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது குறித்து நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று அதில் குறிப்பிடப்பிட்டுள்ளது.

Summary

While Governor R.N. Ravi walked out of the assembly without reading the governor's address, Speaker Appavu read the governor's address in the legislative assembly.

பேரவைத் தலைவர் அப்பாவு.
மைக்கை அணைத்தனர்! 13 காரணங்களைத் தெரிவித்து ஆளுநர் மாளிகை அறிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com