

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 3,600 உயர்ந்த நிலையில் இன்று ரூ. 2,800 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில் நேற்று(செவ்வாய்) காலையில் சவரனுக்கு ரூ. 1,280, மாலையில் ரூ. 2,320 என ஒரே நாளில் ரூ. 3,600 உயர்ந்தது.
தொடர்ந்து இன்று(ஜன. 21, புதன்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 340 உயர்ந்து ரூ. 14,250 -க்கு விற்பனையாகிறது.
அதேபோல வெள்ளி விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,40,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.