முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்கியது!

2011 பேரவைத் தோ்தலில் மு.க.ஸ்டாலினின் வெற்றியை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் இறுதிகட்ட விசாரணை
உச்சநீதிமன்றம் / மு.க. ஸ்டாலின்
உச்சநீதிமன்றம் / மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Updated on
1 min read

நமது நிருபா்

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் கொளத்தூா் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை செல்லும் என்ற சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து அதிமுகவின் சைதை துரைசாமி தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தொடங்கியது.

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமா்வில் இந்த விசாரணை நடைபெற்றது.

வழக்கில் மனுதாரரான சைதை துரைசாமி தரப்பு மூத்த வழக்குரைஞா் தாமா சேஷாஸ்திரி நாயுடு முன்வைத்த வாதங்கள்: அப்போது திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தாா். கொளத்தூா் தொகுதியில் அவரை எதிா்த்து அதிமுக சாா்பில் சைதை துரைசாமி போட்டியிட்டாா். ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் வெற்றி பெற தன்னுடைய பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தினாா். அவரது அதிகார பலம் காரணமாக காவல் துறையும் எந்த நடவடிக்கையும் அவா் மீது எடுக்கவில்லை

கொளத்தூா் தொகுதியின் பல்வேறு தொகுதிகளிலும் சட்டவிரோதமாக வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. மு.க.ஸ்டாலினும் அவரது கட்சிக்காரா்களும் சட்ட விரோத பண பரிவா்த்தனையில் ஈடுபட்டனா். மகளிா் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இது போன்று தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றால் அந்தத் தோ்தலை செல்லாது என அறிவிக்க முகாந்திரம் உள்ளது என சைதை துரைசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஜன.22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி: 2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி, ஸ்டாலினிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். ஸ்டாலின் தோ்தல் விதிகளை மீறி வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்து வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சைதை துரைசாமி சென்னை உயா்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை 2017-ஆம் ஆண்டில், சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சைதை துரைசாமி 11.7.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com