தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது பற்றி...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த 4 மீனவர்களும், சீர்காழியைச் சேர்ந்த 3 மீனவர்களும் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

இவர்கள் 7 பேரும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

”மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று (21.01.2026) சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்.

தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகத்தினருக்குக் கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியினையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamil Nadu fishermen arrested: Chief Minister writes to External Affairs Minister

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com