வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு - தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது தோ்வுத் துறை....

News image
Updated On :22 ஜனவரி 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், தோ்வுத் துறை உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜன. 22) வெளியிடப்பட்டுள்ளது.

இதை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐ.டி, கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பிளஸ் 1 அரியா் பெயா்ப் பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களும் ஜன. 24-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்த வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.