தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில்: நாளை முன்பதிவு

தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில்: நாளை முன்பதிவு
கோப்புப்படம்.
Updated on
1 min read

தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வாரந்தோறும் புதன்கிழமை தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.

அதேநாளில் காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

அதன்படி, நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம் - சர்லப்பள்ளி இடையே இயக்கப்படும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும், திருச்சூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவையையும் அவர் தொடக்கிவைத்தார்.

Summary

Bookings for the Tambaram - Thiruvananthapuram Amrit Bharat Express train service will begin at 8 am tomorrow.

தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில்: நாளை முன்பதிவு
குஜராத்தை போல கேரளத்திலும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com