குஜராத்தை போல கேரளத்திலும் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி

பாஜக மீது கேரளம் நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி நம்பிக்கை
பிரதமர் மோடி | கேரள முதல்வர் பினராயி விஜயன்
பிரதமர் மோடி | கேரள முதல்வர் பினராயி விஜயன்பிடிஐ
Updated on
1 min read

குஜராத்தை போல கேரளத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை (ஜன. 23) நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முடிவுற்ற பணிகளை தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து, அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "1987-க்கு முன்பாக பாஜக ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அந்த சமயத்தில், செய்தித்தாள்கள் பாஜக பற்றி இரண்டு வரிகள்கூட அச்சடிக்கவில்லை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிபிடிஐ

இதன் பின்னர்தான், 1987-ல் அகமதாபாதில் முதன்முறையாக பாஜக வெற்றி பெற்றது. எங்கள் பணி மற்றும் சேவையை மக்கள் கண்டனர்.

இதன் விளைவாகவே, இப்போது பல ஆண்டுகளாக எங்களை குஜராத் மக்கள் நம்பி வருகின்றனர். இவை அனைத்தும் ஒரு நகரத்தில் தொடங்கியது.

கேரளத்திலும் இது ஒரு நகரத்தில் தொடங்கியுள்ளது. கேரளம், பாஜக மீது நம்பிக்கை கொண்டுள்ளது.

குஜராத்தில் ஒரு நகரத்தில் பாஜக ஆட்சி தொடங்கியதுபோல, கேரளத்திலும் நடக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி | கேரள முதல்வர் பினராயி விஜயன்
தேர்தல் சீசனில் மட்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின்
Summary

PM Modi expresses confidence changes will happen in Kerala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com