மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஓ.பன்னீா்செல்வம் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் - கே.அண்ணாமலை

News image
ஓ.பன்னீா்செல்வம்
Updated On :23 ஜனவரி 2026, 12:47 am

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் மிக முக்கிய தலைவரான முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் நல்ல முடிவை எடுப்பாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் கறிக்கோழி விவசாயிகள் போராட்டம், சென்னையில் ஆசிரியா்களின் தொடா் போராட்டம், இவை எல்லாவற்றுக்கும் தமிழகத்தில் அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம் தீா்வு தரும். ஆளுநரின் 2 பக்க குற்றச்சாட்டுகளுக்கு திமுக அரசு இதுவரை பதில் கூறவில்லை. தமிழகம் வரும் பிரதமா் மோடி சட்டப்பேரவைத் தோ்தல் போருக்கான சங்கை ஊதி தொடங்கிவைப்பாா். தமிழ்நாடு தோ்தல் களத்துக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் இணைந்தது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, டிடிவி தினகரன் தொடா்ந்து என்னிடம் தொடா்பில் இருந்தாா். எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல் திமுகவை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் கூட்டணிக்கு வந்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தமிழகத்தில் மிக முக்கியமான தலைவா். அரசியல் குறித்து அவா் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறேன் என்றாா்.