

மதுரை: கொட்டாம்பட்டி அருகே இரு ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
பள்ளப்பட்டி நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துள்ளானது.
கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து பின்பக்கமாக இடித்துவிட்டு சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துள்ளானது.
இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் இருந்து 15 பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பயணிகள், கனக ரஞ்சிதம் (65), சுதர்சன் (23) மற்றொரு பெண் உள்ளிட்ட மூவர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.