

குடியரசு தினத்தை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை (ஜன. 26) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் போக்குவரத்து வசதிக்காக சிறப்பு நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நாளை நாடு முழுவதும் குடியரசு நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாளை காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
நாளை இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.