

குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கெளரவித்தார்.
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் நீலகிரி தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும் வீரதீர செயலுக்கான பதக்கம் கன்னியாகுமரியைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.
மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது திருப்பூரைச் சேர்ந்த கலிமுல்லாவுக்கு வழங்கப்பட்டது. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தஞ்சையைச் சேர்ந்த வீரமணிக்கு வழங்கப்பட்டது.
இவைத்தவிர ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் என 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மதுரை மாநகர காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையத்திற்கான முதல்வர் விருது வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரம், கோவை காவல் நிலையங்களுக்கு இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.