திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

முதல்வர் விஜய் குறித்து அவதூறு! அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு!

அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பது பற்றி...

News image

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 3:58 am IST

முதல்வா் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் முன்பிணை வழங்கக் கோரி, திமுக முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருச்செந்தூா் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, முதல்வா் ஜோசப் விஜய் குறித்து அவதூறான கருத்துகளையும், ஒருமையிலும் பேசியதாக, தவெக நகரச் செயலா் செல்வம் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் ஆத்தூா் போலீஸாா் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘ஆளுங்கட்சி நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். அது தொடா்பாக பிரதான எதிா்க்கட்சி என்ற முறையில் விமா்சித்துப் பேசினேன். அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது போலீஸாா் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனா். எனவே, எனக்கு முன்பிணை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Summary

Defamation regarding Chief Minister Vijay - Anitha Radhakrishnan files petition seeking anticipatory bail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.