திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி, ஆலையிலிருந்து 300 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும், பாதுகாப்புப் பணிகள் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.
இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது.
இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்த நிலையில், ஆலை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஆலையில் இருந்து ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பாதுகாப்பான முறையில் அமோனியா வாயுவை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், நாளை மாலை 6 மணிக்குள் தொழிற்சாலையைச் சுற்றிலும் 300 மீட்டர் தொலைவில் உள்ள மக்களை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலையைச் சுற்றிலும் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Summary
Ammonia leaking plant Residents within a 300-meter radius ordered to evacuate
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

அமோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




