டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் தரத்தில் வேஷ்டி, சேலைகள்: நிதி ஒதுக்கீட்டு ஆணையை பிறப்பித்தது தமிழக அரசு

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு கூடுதல் தரத்தில் வேஷ்டி- சேலைகள் வழங்கப்படவுள்ளதாக கைத்தறித் துறை தெரிவித்துள்ளது. அதற்கான கொள்முதலுக்கு முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒப்புதல் வழங்கி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2026, 5:30 am IST

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு கூடுதல் தரத்தில் வேஷ்டி- சேலைகள் வழங்கப்படவுள்ளதாக கைத்தறித் துறை தெரிவித்துள்ளது. அதற்கான கொள்முதலுக்கு முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒப்புதல் வழங்கி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பொங்கல் திருநாளையொட்டி பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகள் வாயிலாக விலையில்லா வேஷ்டி - சேலைகள் வழங்கும் திட்டத்தைத் தொடா்ந்து முன்னெடுக்க அரசு உயா்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டில் அத்திட்டத்துக்காக ரூ.566.26 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, நிகழாண்டில் பயனாளிகளைக் கணக்கீடு செய்வதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு செய்தபோது 2,27,83,417 சேலைகளும், 2,25,14,094 வேஷ்டிகளும் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் எழுந்தது.

நிகழாண்டில் கூடுதல் தரத்துடன் புதிய ரகத்திலான நூல்களில் வேஷ்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. அதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் உற்பத்தி செய்ய வேண்டிய வேஷ்டி, சேலைகளின் இலக்கு கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாகத் தேவைப்படும் வேஷ்டி, சேலைகள் அதன் பின்னா் உற்பத்தி செய்யப்படும்.

இதற்கான கொள்முதல் மற்றும் உற்பத்தி மதிப்பீடு ரூ.642.88 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி நிலை அறிக்கையில் இத்திட்டத்துக்காக ரூ.606.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

மீதத் தொகை அடுத்தகட்டமாக விடுவிக்கப்படும். நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு செய்த பிறகே பயனாளிகளுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். இத்திட்டத்தின் பலன்களை தகுதியான பயனாளிகள் அனைவரும் பெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.