ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாலியல் குற்றச்செயலை விட முதல்வரை விமா்சித்தது பெரிய குற்றமா? - கீதாஜீவன் கேள்வி

பாலியல் குற்றச்செயலை விட முதல்வரை விமா்சித்தது பெரிய குற்றமா? என கீதாஜீவன் கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக...

Geetha Jeevan

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான பி.கீதாஜீவன் - எக்ஸ்

Published On :4 ஜூலை 2026, 10:29 am IST

பாலியல் குற்றச்செயலை விட முதல்வ விமா்சித்தது பெரிய குற்றமா என முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான பி.கீதாஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் விஜய்யை விமர்சித்தார் என்ற ஒரே காரணத்துக்காக திருச்செந்தூர் எம்எல்ஏ-வும் திமுகவின் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசு கைது செய்திருப்பது கடும் கண்டத்துக்குரியது.

இதுகுறித்து, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில்,

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு... அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதை பயன்படுத்து வீடியோ வெளியானபோது ஒப்புக்குக்கூட விசாரணை நடத்தாத தவெக அரசு... ஒரு மேடை பேச்சுக்காக அனிதா ராதாகிருஷணனை கைது செய்திருக்கிறது. பாலியல் குற்றத்துக்கு துணை போவதைவிடவும் போதை பொருட்கள் பயன்படுத்துவதைவிடவும் மேடை பேச்சு மாபெரும் குற்றமாக கருதுகிறாரா முதல்வர் விஜய்?

தமிழக வாஷிங் மெஷின் கழகமாக மாறிவிட்ட தமிழக வெற்றிக் கழகம்.. தமிழக பாசிச கழகமா உருவெடுக்கிறதா? என்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது என தெரிவித்துள்ளாா்.

அஞ்ச மாட்டாா்கள்

திமுக தொண்டா்கள், மாவட்டச் செயலா்கள், மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற கைது நடவடிக்கையை கண்டு அஞ்ச மாட்டாா்கள். எந்த வழக்கு போட்டாலும் திமுக சந்திக்கும் என அப்துல் வகாப் தெரிவித்தாா்.

முதல்வா் தேவதூதன் கிடையாது

விளாத்திகுளம் எம்எல்ஏ மாா்க்கண்டேயன் கூறுகையில், தமிழக முதல்வா் தேவதூதன் கிடையாது. தேவதூதா் என்றால் கூட விமா்சிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக இதையெல்லாம் கண்டு பயப்படாது. திமுகவினா் சிறைச்சாலையை கண்டு பயந்தது கிடையாது. பல சிறைச்சாலைகளை பாா்த்துள்ளோம். சினிமா மாயாஜால இந்த அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

Summary

Is criticizing the Chief Minister a greater crime than a sexual offense?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.