ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), திங்கள்கிழமை (ஜூலை 6) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published On :6 ஜூலை 2026, 4:33 am IST

வங்கக் கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), திங்கள்கிழமை (ஜூலை 6) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சென்னை உள்பட 6 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. பகல் நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் 103.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

நாகை -102.8, சென்னை மீனம்பாக்கம்- 102.2, சென்னை நுங்கம்பாக்கம்-101.48, மதுரை விமான நிலையம்- 101.12, அதிராமப்பட்டினம்- 100.04 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்தது.

மழை நீட்டிப்பு: தெற்கு குஜராத்திலிருந்து கேரளம் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் ஜூலை 8 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வலுப்பெற்ற புயல் சின்னம்: வடக்கு ஒடிஸா - மேற்கு வங்கம் அருகே வங்கக் கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) , ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது, திங்கள்கிழமை (ஜூலை 6) மேற்கு}வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஸா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு அருகில் உள்ள திகாவிர்க்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் மேற்கு}வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஸா மற்றும் வடக்கு சத்தீஸ்கரை நோக்கி நகரும். இந்தப் புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாட்டம் அவலாஞ்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் தலா 80 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.