திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி பகுதியில் சாலையின் ஓரத்தில் லாரியை பழுதுபார்ப்பதற்காக நின்றிருந்த போது லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை பகுதியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி விறகு ஏற்றி சென்ற லாரி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே வந்தபோது லாரியின் டயர் பஞ்சரானதால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அப்போது நத்தம் அருகே மூங்கில்பட்டியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் சித்திரைவேல் என்பவர் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி ஓட்டி வந்த இருசக்கர வாகனம், லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சித்திரைவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், லாரியை பழுதுபார்த்துக் கொண்டிருந்த நத்தம் வேலாயுதம்பட்டியைச் சேர்ந்த லோடுமேன் பொன்னுக்காளை(72) மீது பைக் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் நத்தம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பொன்னுக்காளை உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பலியான சித்திரைவேல் பத்து நாள்களுக்கு முன்புதான் புதிய இருசக்கர வாகனத்தை(YAMAHA R15) வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Summary
Two killed after motorcycle crashes into a lorry parked near Natham; shocking CCTV footage released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலக்கோடு அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

பண்ருட்டி: டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்து! 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!




