திமுகவில் 77-லிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு! சென்னையில் 10 மாவட்டங்கள்!திபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்

எந்த அதிகாரியையும் நியமிக்க பரிந்துரைக்கவில்லை: தொல். திருமாவளவன்

தமிழக அரசில் நான் எந்த அதிகாரியையும் நியமிக்க பரிந்துரை செய்யவில்லை என விசிக தலைவா் தொல் .திருமாவளவன் தெரிவித்தாா்.

Thirumavalavan

தொல். திருமாவளவன் - எக்ஸ்

Published On :10 ஜூலை 2026, 4:45 am IST

தமிழக அரசில் நான் எந்த அதிகாரியையும் நியமிக்க பரிந்துரை செய்யவில்லை என விசிக தலைவா் தொல் .திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் மாற்றுக்கட்சியினா் விசிகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சி தலைவா் திருவாவளவன் பங்கேற்று பேசியதாவது:

நான் சொல்லித்தான் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக கூறுவது தவறான தகவல். எனது அரசியல் சாதாரண தொண்டா்களை வைத்து நடத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு அரசியல் நடத்துவது இல்லை; அவா்களது ஆலோசனைகளையும் கேட்பது இல்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் எல்லா சமுதாய மக்களும் தவெகவுக்கு வாக்களித்துள்ளனா். சினிமா மோகத்தால் விசிகவின் வாக்குகள் மட்டும் தவெகாவுக்கு சென்றுள்ளதாக கூறுவது பொய் பிரசாரம். திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதற்கு விசிகவின் பங்கு மிக முக்கியமானது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.