விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கோயில் நிலத்தில் பெரியார் சிலையை அகற்ற ராம.ரவிக்குமார் கோரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பெரியார் சிலை நிறுவப்பட்டிருப்பதாக ராம.ரவிக்குமார் குற்றச்சாட்டு குறித்து...

News image

பெரியார் சிலை - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 9:37 pm IST

தஞ்சை மாவட்டத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பெரியார் சிலை நிறுவப்பட்டிருப்பதாக ராம.ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூரில் உள்ள 1,300 ஆண்டுகள் பழைமையான பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயிலின் நிலத்தில் 1990-ல் பெரியார் சிலை நிறுவப்பட்டது.

கோயில் நிலத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டிருப்பது குறித்த தகவல்கள்கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ராம. ரவிக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அறநிலையத்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் பதிலளித்துள்ளது.

இந்த நிலையில், கோயில் நிலத்தில் பெரியார் சிலை நிறுவ இந்து சமய அறநிலையத் துறை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோயில் நிலத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ளதாகவும்கூறி, சிலையை அகற்ற அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராம. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Summary

Rama. Ravikumar demands removal of Periyar statue from temple land

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.