சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

News image

சென்னை உயர் நீதிமன்றம் - IANS

Updated On :10 ஜூலை 2026, 10:14 am IST

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான நகராட்சி நிருவாகத் துறை முறைகேடு வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நியமன முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக எம்.பி. ஐ.எஸ். இன்பதுரை தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பாஜக பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஆள்கொணர்வு வழக்குகளும்

பள்ளிக்கரணை சதுப்பு நில குடியிருப்பு விவகாரம் தொடர்பான இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வில் டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு மற்றும் யானைகள் வழித்தட பாதுகாப்பு குறித்த வழக்குகள்

உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், லீமா ரோஸ், விஜய் தாமு உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகின்றன.

Summary

Cases are scheduled for hearing at the Madras High Court today July 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.