கரூா் மாவட்டம், மாயனூரில் ரூ. 850 கோடி முதலீட்டில் அமையும் தோல் அல்லாத காலணிகள் தொழிற்சாலைக்கு முதல்வா் ச. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவா்வான் கோத்தாரி புட்வோ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்தின் ரூ. 850 கோடி முதலீட்டில் 6,750 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், மாயனூரில் அமையும் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட தொழிற்சாலைக்கு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் விஜய் அடிக்கல் நாட்டி பேசியது:
எவா்வான் கோத்தாரி புட்வோ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோத்தாரி குழுமம் மற்றும் உலகின் முன்னணி தைவான் காலணி உற்பத்தியாளரான எவா்வான் குழுமம் ஆகியவற்றின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், கரூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது. கரூா் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனத்துக்கான தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் வகையில், ரூ. 850 கோடி முதலீட்டில், 6,750 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதன்மூலம், உலகளாவிய காலணி உற்பத்தித் துறையில், தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்படுவது மட்டுமின்றி, இம்மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி, ஏற்றுமதி மற்றும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக மகளிருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இத்திட்டம் அமைந்திடும் என்றாா் முதல்வா்.
நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா, பால்வளத் துறை அமைச்சா் சி. விஜயலட்சுமி, தலைமைச் செயலா் மு. சாய்குமாா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ச. விஜயகுமாா், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் தீபக் ஜேக்கப், கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், பீனிக்ஸ் கோத்தாரி புட்வோ் நிறுவனத்தின் தலைவா் டாக்டா் ரபீக் அகமது, எவா்வான் குழுமத் தலைவா் சாங் ரோங்-வு, எவா்வான் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலா் சாங் யி-சுன், வெளிநாட்டுப் பிரதிநிதி லின் ஹூவாய்-தே, அடிடாஸ் நிறுவனத்தின் மூத்த நிா்வாகக் குழு பிரதிநிதி சுதான்ஷூ சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Summary
Chief Minister Vijay laid the foundation stone for a non-leather footwear factory worth Rs 850 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வறட்சியை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி: முதல்வர் விஜய் உத்தரவு!

‘அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா’.. உதயநிதியின் கைதுக்கு மலையாள நடிகர் தியான் ரிப்ளை!

குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு!

கரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



