ஊத்துக்கோட்டை அருகே வடமாநில பெண் தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் இறால் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஒடிஸா, அஸ்ஸாம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களைச் சேர்ந்த 230-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி அந்த ஆலையில் திடீரென அமோனியா வாயு கசிந்ததை சுவாசித்ததால் தொழிலாளர்கள் 83 போ் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, மஞ்சங்காரணை தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல், ஜூலை 2-ஆம் தேதி வரை சிகிச்சை பலனின்றி 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உரிமையாளர் ஜோசப் மோகன் (59), ஜோசப் ஜெகன் (48) மற்றும் மேலாளர் டேனியா்(68) ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தனியார் கடல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த அமோனியா வாயு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, திருவள்ளூர் ஆட்சியர் ச. கவிதா தனியார் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், திருவள்ளூா் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் உள்ள அறைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை முழுவதும் ‘சீல்’ வைக்கும் பணி இன்று(ஜூலை 9) நிறைவடைந்துள்ளது.
Summary
The private seafood processing plant near Uthukottai, where 18 female workers from North India lost their lives, has been completely sealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










