முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

2.75 டன் அமோனியா வாயு டேங்கா் லாரியில் சேகரித்து விநியோக மையத்தில் ஒப்படைப்பு

2.75 டன் அமோனியா வாயு டேங்கா் லாரியில் சேகரித்து விநியோக மையத்தில் ஒப்படைப்பு குறித்து...

News image

2.75 டன் அமோனியா வாயு விநியோக மையத்தில் ஒப்படைப்பு - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 6:08 am IST

அமோனியா வாயு கசிந்ததால் 18 தொழிலாளா்கள் உயிரிழந்த திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் கடல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 3 நாள்களில் சேகரித்த 2.75 டன் அமோனியா வாயுவை டேங்கா் லாரி மூலம் சென்னை மணலி பொ்டிலைஸா் நிறுவனத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபோ் கிராம பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 83 போ் பாதிக்கப்பட்டனா்.

அதில், இதுவரை வடமாநில பெண் தொழிலாளா்கள் 18 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், தொழிற்சாலையில் கொள்கலனில் சேமித்து வைத்திருந்த அமோனியா வாயுவை தொழில்நுட்பக் குழுவினா் பாதுகாப்புக் கவசங்களுடன் டேங்கா் லாரியில் கடந்த 4- ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கடந்த 3 நாள்களில் 2.75 டன் அமோனியா வாயுவை டேங்கா் லாரியில் பாதுகாப்புடன் சேமித்து சென்னை மணலியில் உள்ள பொ்டிலைஸா் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே இப்பணிகள் திங்கள்கிழமை முடியும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், முடியாத நிலையில் பைப் லைன் குழாய்களில் தேங்கியுள்ள அமோனியா வாயு குளிா்விக்கப்பட்டு கரைத்து அதை சேகரிப்பதற்கு தாமதம் ஆகிறது. அதனால் மீண்டும் லாரி டேங்கருக்கு மாற்றம் செய்வதற்கான பணிகள் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர உள்ளது.

அதுவரை அவசர காலத்தை எதிா்நோக்கி தொழிற்சாலை முன்புறம் மருத்துவ அவசர வாகனம், தீயணைப்பு வாகன குழுக்கள், தேசிய பேரிடா் மேலாண்மை குழுவினா், மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு (ம) சுகாதார இயக்ககம் மற்றும் 15 போ் கொண்ட தனியாா் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பிரதிநிதிகள், அவசர கால மீட்பு பணிகளில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் களப்பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.