நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

பிரியாணி சாப்பிட்ட 100 பேருக்கு உடல்நலக்குறைவு: உணவு விநியோக நிறுவனத்துக்கு சீல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு தரமற்ற உணவு விநியோகம் செய்த உணவு விநியோக நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

பிரியாணி சாப்பிட்ட 100 பேருக்கு உடல்நலக்குறைவு - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 1:34 pm IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு தரமற்ற உணவு விநியோகம் செய்த உணவு விநியோக நிறுவனத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைபாக்கம் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் இருந்து உணவு வரவழைக்கப்படு உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் உணவை சாப்பிட்ட சிறுது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இதையடுத்து உணவு சாப்பிட்ட அனைத்து தொழிலாளர்களும் ஆம்புலன் வாகனம் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், தனியார் உணவு விநியோக நிறுவனம் வழங்கிய தரமற்ற உணவே தொழிலாளர்களின் உடல் நல பாதிப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

உணவு விநியோக நிறுவனத்துக்கு சீல்

இதனையடுத்து தனியார் உணவு விநியோக நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

சிக்கன் விநியோகம் நிறுவனத்துக்கு சீல்

இன்னும் தொழிலாளர்கள் பலர் சிகிச்சை பெற்றும் நிலையில், கந்தன்சாவடியில் உள்ள சிக்கன் விநியோகம் செய்த நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Summary

100 People Fall Ill After Eating Biryani: Food and Chicken Supply Establishments Sealed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.