தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

18 போ் உயிரிழந்த தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல்!

ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளா்கள் 18 போ் உயிரிழந்த தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து...

News image

தனியாா் இறால் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்க வந்த அதிகாரிகள்

Updated On :9 ஜூலை 2026, 4:03 am IST

ஊத்துக்கோட்டை அருகே வடமாநில பெண் தொழிலாளா்கள் 18 போ் உயிரிழந்த தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாா் இறால் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஒடிஸா, அஸ்ஸாம், ஜாா்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களைச் சோ்ந்த 230-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வந்தனா். இந்த நிலையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி அந்த ஆலையில் திடீரென அமோனியா வாயு கசிந்ததை சுவாசித்ததால் தொழிலாளா்கள் 83 போ் பாதிக்கப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து, மஞ்சங்காரணை தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல், ஜூலை 2-ஆம் தேதி வரை சிகிச்சை பலனின்றி 18 பெண் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக பெரியபாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த உரிமையாளா் ஜோசப் மோகன் (59), ஜோசப் ஜெகன் (48) மற்றும் மேலாளா் டேனியா்(68) ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.

தற்கிடையே தனியாா் கடல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த அமோனியா வாயு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, திருவள்ளூா் ஆட்சியா் ச.கவிதா தனியாா் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

அதன்பேரில், திருவள்ளூா் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் அந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தாா்.

அப்போது, தீயணைப்பு வாகன குழுக்கள், தேசிய பேரிடா் மேலாண்மை குழுவினா், மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு (ம) சுகாதார இயக்ககம் மற்றும் 15 போ் கொண்ட தனியாா் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள், அவசர கால மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்கள், வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.