மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கரூரில் உற்சாக வெள்ளத்தில் தவெகவினர்! முதல்வர் விஜய்யைக் காண காத்திருந்தோர் சொல்வது என்ன?

கரூரில் உற்சாக வெள்ளத்தில் தவெகவினர், முதல்வர் விஜய்யைக் காண காத்திருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - From video grab

Published On :10 ஜூலை 2026, 12:54 pm IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசி வருகிறார். முன்னதாக, அவரைக் காண கரூரில் ஏராளமான மக்கள் வழிநெடுகிலும் காத்திருக்கிறார்கள்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்குள் வெறும் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், பாஸ் கிடைக்காததால், உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்கும் மக்கள் பலரும், நாங்கள்தான் முன்கூட்டியே பாஸ் வாங்கவில்லை. இதற்கு முதல்வர் என்ன செய்வார். அவரை தொலைவிலிருந்தாவது பார்த்துவிட்டால் போதும் என்றுதான் வெய்யிலில் காத்திருக்கிறோம் என்கிறார்கள்.

அரங்குக்கு அருகே முதல்வர் விஜய்யை முதல் முறையாக பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு காத்திருக்கும் பெண் ஒருவர் பேசுகையில், முதல்முறையாக பார்க்கப் போகிறேன் முதல்வர் விஜய்யை. எப்போ வருவார் என்று காத்திருக்கிறேன். கடைசி முறை கரூர் வந்த போது, அவருக்கு லேசான மனக்கசப்போடு அனுப்பிவிட்டோம். இந்த முறை கரூர் வரும் அவரை சந்தோஷமாக அனுப்ப வேண்டும் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக சந்தோஷமாகத்தான் அனுப்புவோம் என்று கூறினார் மகிழ்ச்சியோடு.

அடுத்து, கரூர் மக்கள் சந்திப்பு அரங்கத்துக்குள், பாஸ் பெற்று விஜய் வருகைக்காக காத்திருந்த பெண் ஒருவரிடம், ஊடகத்தினர் பேசுகையில், கடந்த முறை கரூர் வந்த போது, முதல்வர் விஜய்யை, நெடுஞ்சாலையில் நின்று பார்த்தோம். ஆனால், கூட்டம் நடைபெறும் அரங்குக்குச் செல்லவில்லை. ஒருவேளை போயிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்போமா என்று தெரியவில்லை என சிரித்தபடி கூறினார்.

இப்படி ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் பலரும், முதல்வர் விஜய்யைக் காண ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.