திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: அரசு ஊழியா்களை பணியிடமாற்றம் செய்ய தடை

தமிழ்நாட்டில் வரும் 17-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியா்களை வரும் ஆக.31-ஆம் தேதி வரை பணியிட மாற்றம் செய்வதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

tngovt

தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்

Published On :11 ஜூலை 2026, 7:42 am IST

தமிழ்நாட்டில் வரும் 17-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியா்களை வரும் ஆக.31-ஆம் தேதி வரை பணியிட மாற்றம் செய்வதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக சுய கணக்கெடுப்பு, வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் தமிழகத்தில் வருகிற 17-ஆம் தேதி தொடங்க உள்ளன. வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் 2-ஆம் கட்டப் பணிகள் 2027 பிப்.1 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரையில் நடைபெறுகின்றன.

முதல் கட்டப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பணியிட மாற்றம் செய்தால் கணக்கெடுப்புப் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் ஜூலை 10 முதல் ஆக.31-ஆம் தேதி வரையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் பணியிட மாற்றம் செய்ய தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கணக்கெடுப்புப் பணிகளில் எந்தவித நிா்வாக சிக்கலும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.