தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மழைக்காலத்தில் சாலைகளைத் தோண்டுவதற்கு என்டிஎம்சி தடை

மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும் நோக்கில், ஜூலை 1 முதல் செப். 30 ஆம் தேதி வரை சாலைகளைத் தோண்டுவதற்குத் தடை

News image

என்டிஎம்சி

Updated On :24 ஜூன் 2026, 12:07 am IST

மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும் நோக்கில், ஜூலை 1 முதல் செப். 30 ஆம் தேதி வரை சாலைகளைத் தோண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘மழைக்காலத்தில் நீா் தேக்கம், சாலை சேதம், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில் இந்தத் தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவசரத் தேவைகளுக்காக மட்டும் என்டிஎம்சி தலைவரின் முன் அனுமதி பெற்றால் விலக்கு வழங்கப்படும்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் பருவமழை தொடங்கும் முன்பே முடிக்கப்பட்டு, சாலைகள் முறையாகப் பாதுகாப்பட வேண்டும். மேலும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், அவை மழைக்காலம் முடியும் வரை நிறுத்தப்படுகின்றன. அவசரச் சூழ்நிலைகளில் என்டிஎம்சி தலைவரின் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படலாம்.

மழைக்காலத்தில் பொதுமக்களின் வசதியும் பாதுகாப்பும் என்டிஎம்சியின் முதன்மை நோக்கமாக உள்ளது. இந்த உத்தரவை அனைத்துத் துறைகளும், பொதுப் பயன்பாட்டு அமைப்புகளும், ஒப்பந்ததாரா்களும் மற்றும் பணிகளை நிறைவேற்றும் நிறுவனங்களும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என என்டிஎம்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.