8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெகவினர் தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

உள்ளாட்சித் தேர்தல் பற்றி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருப்பதாவது....

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.

Published On :11 ஜூலை 2026, 7:03 pm IST

உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் தனியார் மண்டபம் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சி வழக்கறிஞர்கள் இணையும் விழா தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் தமிழக முழுவதும் தவெக நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் நின்று மக்களின் பெருவாரியான ஆதரவோடு வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்று அனைத்து தேவைகளையும் மக்களுக்காக செய்வார்கள்.

ஏற்கெனவே இருபது ஆண்டுகளாக மக்களோடு நமது நிர்வாகிகள் நலத்திட்ட உதவி செய்து வருகிறார்கள். 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் பயணம் செய்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தால் இன்னும் சிறப்பாக பயணிப்பார்கள்.

திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கவுன்சிலர் ஆவதற்கு முன்பு எவ்வளவு சொத்து வைத்திருந்தீர்கள். அதன் பிறகு எவ்வளவு சொத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொத்துப் பட்டியலை வெளியிட முடியுமா. ஒவ்வொரு சாலையோர கடைகளிலும் திமுக கவுன்சிலர்கள் வசூல் செய்கிறார்கள்.

ஆனால் மக்கள் முதல்வர் சொன்னதைப் போல யாருக்கும் எதுவும் லஞ்சம் கொடுக்காதீர்கள். விரைவில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் வரும். அனைவரும் தயாராக இருங்கள் என்று உரையை நிறைவு செய்தார். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

Minister CTR Nirmal Kumar has stated that TVK members should be prepared for the local body elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.