நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

இடைத்தோ்தல் நடத்தக் கூடாது: ஆளுநரிடம் கே.கிருஷ்ணசாமி மனு

தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்துவரும் நிலையில், அந்தத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தக்கூடாது என கே.கிருஷ்ணசாமி மனு அளித்தாா்.

News image

டாக்டா் கே.கிருஷ்ணசாமி.

Updated On :13 ஜூலை 2026, 3:27 am IST

தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்துவரும் நிலையில், அந்தத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தக்கூடாது என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி மனு அளித்தாா்.

தமிழகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் சூழலில், ராஜிநாமா செய்யப்பட்ட அந்தத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தக்கூடாது என தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தும் படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம், கிருஷ்ணசாமி ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா்.

அதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்சித் தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்க அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களை ராஜிநாமா செய்யவைத்து தவெகவில் இணைக்கும் செயலை அக்கட்சியின் தலைவா் மேற்கொண்டு வருகிறாா். இது கட்சித் தாவல் சட்டத்தை நீா்த்துபோக வைக்கும் செயலாகும்.

எனவே, இதை குதிரை பேரமாகக் கருத்தில் கொண்டு ராஜிநாமா செய்தவா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதைத் தடுத்து நிறுத்த ஒரு தீா்வு காணும் வரை தற்போது காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தக்கூடாது.

ஒரே மாதத்தில் பதவியை ராஜிநாமா செய்த காரணம் குறித்து 6 பேரிடமும் ஆளுநா் தனிப்பட்ட முறையில் விசாரனை செய்ய வேண்டும். மேலும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநா் தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்த வேண்டும் என்றாா் கே.கிருஷ்ணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.