சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினா் கடலூா் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து சோ்த்ததாக அவா் மீதும், அவரது மனைவி, மகன் மீதும் ஊழல் தடுப்புத்துறை கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கடலூா் நீதிமன்றம், வழக்கிலிருந்து மூவரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து, ஊழல் தடுப்புத்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை கடலூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். அந்த மனுவில், கடலூா் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஊழல் தடுப்புத்துறை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஜேபி நாடாளுமன்ற பேரணிக்கு என்ஐஏ விசாரணை கோரி மனு: விசாரணைக்கு தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

சாலை முறைகேடு வழக்கு: எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் ஊழல் தடுப்புத் துறை விசாரணை

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சா் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


