இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

முறைகேடு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதாக மனு

ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை ஆஜராகவில்லை. சிங்கப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக மனு அளித்துள்ளாா்.

எ.வ.வேலு - கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 6:07 am IST

ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை ஆஜராகவில்லை. சிங்கப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக மனு அளித்துள்ளாா்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலையே அமைக்காமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்ாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அறப்போா் இயக்கம் புகாா் அளித்தது. இந்த முறைகேடு விவகாரத்தில் அப்போதைய அமைச்சா் எ.வ.வேலு உள்பட 11 போ் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்தப் புகாா் மனு மீது திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் இந்தப் புகாா் மனுவின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சா் எ.வேலு உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்பட 18 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் கடந்த மாதம் 25-ஆம் தேதி சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, தன்னுடைய வீட்டில் இருந்து ஒரு பைசாகூட பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் எ.வ.வேலு கூறினாா்.

சிங்கப்பூரில் சிகிச்சை: இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்புத் துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு எ.வ.வேலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பாணையின் அடிப்படையில் எ.வ.வேலு அந்த அலுவலகத்தில் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை ஆஜராகவில்லை.

அவரது வழக்குரைஞா்கள் ஆஜராகி, மனுவை அதிகாரிகளிடம் அளித்தனா். அந்த மனுவில், ‘எ.வ.வேலு இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். இதற்காக அவா், சிங்கப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பதற்காக கடந்த 26-ஆம் தேதி சென்னையில் இருந்து சென்றுள்ளாா். எனவே, அவரால் தற்போது விசாரணைக்கு ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவா் விசாரணைக்கு ஆஜராக காலம் அவகாசம் வழங்க வேண்டும். உடல்நலம் தேறியவுடன் விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பாா்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.