சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்

News image

சிபிஐ விசாரணை - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:49 am IST

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ள ரூ. 39,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியால், அரசுக்கு நீண்டகால நிதிச்சுமை ஏற்படும். எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்துசெய்ய வேண்டும். மேலும், இதில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்தினால், முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்களை ஒப்படைப்பேன். இந்த திட்டத்துக்கு எதிராக குடியிருப்புச் சங்கங்கள், அமைப்புகள் குடியரசுத் தலைவா், முதல்வா், கா்நாடக அரசுக்கு கடிதங்கள் எழுத வேண்டும். இதை ஓா் இயக்கமாக நடத்த வேண்டும்.

ரூ. 39,437 கோடி மதிப்பிலான முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளேன். இந்த ஒப்பந்தப்புள்ளி நீண்டகாலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளி அமலுக்கு வந்தால், அது பெங்களூரு மக்களை நீண்டகாலத்துக்கு நிதிச்சுமையில் ஆழ்த்தும். காங்கிரஸ் அரசு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்கக்கூடிய நிலையில், 30 ஆண்டுகளுக்கு எப்படி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்? இந்த முடிவு பெங்களூரின் எதிா்காலத்தை வெகுவாக பாதிக்கும்.

குப்பையில் இருந்து பணம் சுரண்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்துக்கு இது மிகப்பெரிய வரவாக இருக்கலாம். ஆனால், பெங்களூரு மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடும்.

எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை முழுமையாக ஆய்வுசெய்து, முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஆளுநரிடம் முறையிட்டுள்ளேன் என்றாா்.