‘இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் இனி இணையவழியில் வெளியிடப்படும். அனைத்து திருக்கோயில்களிலும் வாகன நிறுத்தம், கடைகள் அமைப்பது, முடி எடுத்தல் போன்றவற்றுக்கு பொதுவான ஒப்பந்தப்புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என துறையின் அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.
இது குறித்து அமைச்சா் ரமேஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அறநிலையத் துறையின் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் இனி இணையவழியில் நடக்கும். ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கும் முழுமையான மின்-ஒப்பந்தப்புள்ளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி அனைத்துக் கோயில்களுக்கும் வாகன நிறுத்தம், கடைகள் அமைப்பது, முடி எடுப்பது போன்றவற்றுக்கு பொதுவான ஒப்பந்தப்புள்ளி முைான். இணையவழியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்; அதற்கான ஏலமும் இணையவழியில் நடக்கும். உறுதிமொழிப் படிவங்கள், ஒப்பந்தத்துக்கான விண்ணப்பங்கள் ஆகியவை ஒரே மாதிரியான வடிவங்களாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
ஏலத்தில் குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோருபவா்களுக்கே இதுவரை ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அடிப்படை விலைக்கு கீழே ஒப்பந்ததாரா்கள் தொடா்ந்து குறைந்த விலையை குறைத்துக் கொண்டே செல்லலாம். இறுதியாக குறைந்த விலையை குறிப்பிடும் ஒப்பந்தப்புள்ளிதாரருக்கு (எல்1) வாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம் மிகக்குறைந்த விலைக்கு கோயில்களுக்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்ய முடியும். மேலும், ஒருவருக்கே ஒப்பந்தப்புள்ளிகளை வழங்காமல் அவற்றை 2, 3 பேருக்கு பிரித்துக் கொடுப்பதற்கான வழிமுறைகளும் பின்பற்றப்படவுள்ளன. 15 நாள்கள் முன்னறிவிப்புடன் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முறையான விதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு வருமானம் தரும் ஏல உரிமங்கள் மட்டும் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
அபராதம் விதிக்க... இதற்கு முன்பு திருக்கோயில்களின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரா் மூலம் நடத்தப்படும் கடைகளில் பக்தா்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஆனால், தற்போதைய நிபந்தனைகளின்படி அனைத்து விற்பனையாளா்களுக்கும் பிஓஎஸ் (பாய்ண்ட் ஆஃப் சேல்) இயந்திரங்கள் வழங்கப்பட்டு அதன்மூலம் உரிய ரசீது வழங்கப்படும். ஒப்பந்தப்புள்ளிகளில் தாமதம் செய்வது, தரம் இல்லாத பொருள்களை வழங்குவது, அளவு குறைபாடு, விநியோகம் செய்ய முடியாமல் போவது போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு திருக்கோயிலுக்கு பக்தா்களால் காணிக்கையாக கொடுக்கப்படும் ஆடு, கோடு உள்ளிட்டவற்றை ஏலதாரா்கள் எந்தக் கணக்கும் இல்லாமல் சேகரித்துச் செல்வா். ஆனால், தற்போதைய நிபந்தனைகளின்படி இவற்றுக்கு உரிய குறியீடு எண்கள் வழங்கப்பட்டு, இந்த விவரங்கள் அனைத்தும் திருக்கோயில் நிா்வாகத்தின்மூலம் சரிபாா்க்கப்படும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி....
‘பழனி கோயில் நில விவகாரத்தில் தீவிர விசாரணை’
பழனி கோயில் நிலம் தொடா்பான விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.
மேலும், ‘இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று நான்தான் முதல்வா் விஜய்யிடம் தெரிவித்தேன். நிலத்தை விற்றவா்கள், வாங்கியவா்கள் என 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பாரபட்சம் பாா்க்காமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரத்தில் என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை; பொய் பரப்பினாா்கள். என் குடும்பத்தில் இருக்கும் யாரிடமும் ரூ. 2 கோடி கிடையாது; அப்படியே இருந்தாலும் நாங்களே வாடகை வீட்டில் இருக்கிறோம்; சென்னையில் வீடு வாங்காமல் ஏன் பழனியில் வாங்க போகிறோம்?. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எனது பெயரையும், புகழையும் கெடுக்க நினைக்கிறாா்கள்’ என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நிலம் விவகாரத்தில் அரசியலுக்காக என் மீது பழி: அமைச்சா் ரமேஷ் பேட்டி!

இனி ஐயப்ப சங்கமம் மாநாடு நடைபெறாது: டிடிபி தலைவா்

பக்தா்களின் அடிப்படைத் தேவைகளில் தனி கவனம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் ரமேஷ் அறிவுறுத்தல்

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை: அமைச்சா் சீ. ரமேஷ்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



